Paristamil Navigation Paristamil advert login

கடைசி கட்டத்தில் Own கோல் அடித்ததால் பறிபோன வெற்றி - பெனால்டிஷூட் அவுட்டில் ஏற்பட்ட குழப்பம்

கடைசி கட்டத்தில் Own கோல் அடித்ததால் பறிபோன வெற்றி - பெனால்டிஷூட் அவுட்டில் ஏற்பட்ட குழப்பம்

10 ஆவணி 2026 திங்கள் 16:15 | பார்வைகள் : 261


செல்சி மற்றும் ஜோஹோர் தாருல் தாஸிம் அணிகளுக்கு இடையிலான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

மலேசியாவில் நடந்த செல்சி, ஜோஹோர் தாருல் தாஸிம் அணிகளுக்கு இடையிலான கிளப் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி, பெனால்டிஷூட் ரத்து செய்யப்பட்டதால் டிராவில் முடிந்தது.

மலேசியாவில் நடந்த நட்பு ரீதியிலான கிளப் கால்பந்து போட்டியில் செல்சி (Chelsea) மற்றும் ஜோஹோர் தாருல் தாஸிம் (Johor Darul Ta'zim) அணிகள் மோதின.

பரபரப்பாக சென்ற இப்போட்டியில் 88 நிமிடங்கள் வரை ஜோஹோர் தாருல் தாஸிம் அணி 3-2 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது.

ஆனால், அந்த அணியின் ஆன்டோனியோ கிறிஸ்டியன் 89வது நிமிடத்தில் சுயகோல் (Own Goal) அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டிஷூட்-அவுட் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறாததால் மைதானத்தில் பெரும் குழப்பம் நிலவியது.

இரு அணிகளும், ஊழியர்களும் மைதானத்தை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பாததால், ஆட்டம் திடீரென முடிவுக்கு வந்தது.