உணவகத்தில் மேசைக்காக காத்திருந்த தம்பதியின் வாழ்க்கையை மாற்றிய Loto!!
10 ஆவணி 2026 திங்கள் 16:51 | பார்வைகள் : 2028
Dordogne பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, உணவகத்தில் தங்களுக்கான மேசை தயாராகும் வரை காத்திருந்தபோது அருகிலிருந்த லொட்டரி விற்பனை நிலையத்திற்குச் சென்று முதன்முறையாக லொட்டோ விளையாடினர். எதிர்பாராத விதமாக, அவர்கள் வாங்கிய Lotoவால் 10 மில்லியன் யூரோக்கள் பரிசை வென்றனர்.
ஜூன் 26ஆம் தேதி Périgueux நகரில் இந்த சம்பவம் நடந்தது. தாங்கள் வெற்றி பெற்றதை தம்பதி உடனடியாக அறிந்துகொள்ளவில்லை. சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு லொட்டரி முடிவுகளைச் சரிபார்த்தபோதுதான், தாங்கள் மிகப்பெரிய பரிசை வென்றிருப்பது தெரியவந்தது.
முதலில் தாங்கள் 30,000 யூரோக்கள் வென்றதாக நினைத்தனர். ஆனால் பிரான்ஸ் லொட்டரி நிறுவனமான FDJ-யுடன் பேசியபோது, அவர்களின் சீட்டின் உண்மையான மதிப்பு 10 மில்லியன் யூரோக்கள் என்பது உறுதியானது. இந்த வெற்றி, தங்கள் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகளைப் போக்கியதாக தம்பதி தெரிவித்தனர்.
அதே லொட்டரி குலுக்கலில், பரிஸுக்கு வந்திருந்த மற்றொருவரும் 10 மில்லியன் யூரோக்களை வென்றுள்ளார். அவர் வழக்கமாக லொட்டோ விளையாடுபவர் என்றும், கிடைத்த பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சிந்திக்க சிறிது காலம் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் FDJவிடம் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire