செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மேலும் 9 எலும்புக்கூடுகள்
10 ஆவணி 2026 திங்கள் 17:49 | பார்வைகள் : 369
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட 102 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தம் 524 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 513 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் 48ஆவது நாளான இன்றைய தினம் 09 புதிய எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 எலும்புக்கூடுகள் மேலதிக பரிசோதனைகளுக்காக மீட்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வுப் பணியின் போது, சான்றுப் பொருட்களாக மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்று மற்றும் கைவளையல் ஒன்று ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire