Paristamil Navigation Paristamil advert login

மது பாட்டிலுக்கு ரூ.20 கூடுதல் வரி; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

மது பாட்டிலுக்கு ரூ.20 கூடுதல் வரி; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

11 ஆவணி 2026 செவ்வாய் 09:40 | பார்வைகள் : 259


தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு, தலா, 20 ரூபாய் வரை, கூடுதல் வரி விதிக்கும், சட்டத்திருத்த மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக, மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் விற்பனைக்கு பின், மது பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் பிரச்னை எழுகிறது.இதற்காக விற்பனை நிலையில், மது பாட்டில்களுக்கு தலா, 20 ரூபாய் வரை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மதிப்புக்கூட்டு வரியில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் கடந்த, 7ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், மசோதாவை தாக்கல் செய்தார்.  

சட்டசபையில், இந்த சட்ட மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.