போதை ஒழிப்புக்கு சிறப்பு அதிரடிப்படை: ரூ.264 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
11 ஆவணி 2026 செவ்வாய் 11:05 | பார்வைகள் : 224
தமிழகத்தில் போதை ஒழிப்புக்கு 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளதுடன், அதற்காக ரூ.264.14 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
போதைப்பொருளை ஒழிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தபடி 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்படுகின்றன.
மாவட்டத்திற்கு ஒன்று என 37 அதிரடிப்படைகளும், 9 போலீஸ் கமிஷனரங்களில் 28 சிறப்பு அதிரடிப்படைகளும்( சென்னைக்கு -12, மதுரை, ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 2 படைகளும்) அமைக்கப்படுகின்றன.
இதில் 65 இன்ஸ்பெக்டர்கள், 130 சப் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 325 போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்று இருப்பார்கள். இதற்காக ரூ.264.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire