ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - 12 பேர் பலி
11 ஆவணி 2026 செவ்வாய் 08:43 | பார்வைகள் : 200
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் தத்தாரிஸ்தான் மாகாணத்தில் உள்ள குடியிருப்புகள் மீது உக்ரைன் மேற்கொண்டதாக கூறப்படும் டிரோன் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 39 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும், இதுவரை அந்த முயற்சிகள் எதிர்பார்த்த முடிவை எட்டாத நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire