எப்.சி.ஆர்.ஏ.2.0 சட்ட திருத்தத்தால் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்!
12 ஆவணி 2026 புதன் 07:17 | பார்வைகள் : 145
வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்தம் (எப்.சி.ஆர்.ஏ.2.0) நடைமுறைப்படுத்துவதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதோடு நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும், என்று, ஆடிட்டர் சேகர் கூறினார்.
பா.ஜ., தொழில் துறை வல்லுனர் பிரிவு சார்பில், இந்தியாவில் வெளிநாட்டு நிதி பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆடிட்டர் சேகர் பேசியதாவது: இச்சட்ட திருத்த முன்வரைவு கடந்த மார்ச்சில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
அது விவாதத்துக்கு விரைவில் வரும். அதை நிறைவேறாமல் தடுக்க, நாடு முழுக்க பிரச்னைகளை துாண்டி விட திட்டமிட்டுள்ளனர்.
அதை முறியடிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டம் 2010ல் கொண்டுவரப்பட்டது அப்போது, 43 ஆயிரம் தன்னார்வ அமைப்புகள் இருந்தன. தற்போது 3 லட்சத்து 50 ஆயிரம் தன்னார்வ அமைப்புகள் உள்ளன. 95 சதவீதம் பேர் திருத்திய புதிய சட்ட முன் வரைவை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். ஐந்து சதவீதம் தன்னார்வ அமைப்புகள் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பை கிளப்புகின்றன.
சட்ட திருத்தம் என்ன சொல்கிறது?
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை பதிவு புதுப்பிப்பது கட்டாயம். ஆன்லைன் கணக்கு தாக்கல், வெளிநாட்டு நிதி, எந்தப் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மத்திய அரசு வெளிப்படையாக கண்காணிக்கும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வந்த முந்தைய நிதியில், 75 சதவீத நிதியைப் பயன்படுத்திய பிறகுதான், அடுத்த தவணை நிதியை பெற முடியும். இந்த நிதியை மதமாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது.
கல்வி, சுகாதாரம், மேம்பாடு உள்ளிட்ட எந்த பணிக்கு நிதி வருகிறதோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பான் எண் குறிப்பிட வேண்டும். இதனால் தன்னார்வ அமைப்பின் ஆவணங்களை எளிதாக சரிபார்க்கலாம். நம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும் இச்சட்டதிருத்த முன்வரைவு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (எப்.சி.ஆர்.ஏ.2.0) நடைமுறைப்படுத்துவதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதோடு, நம்நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இவ்வாறு , அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பா.ஜ., அனைத்து அணிகளின் ஒருங்கிணைப்பாளர் ராகவன், தொழில்துறை வல்லுனர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராமன், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire