நீட் தேர்வை எதிர்ப்பது தமிழக மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடும்!
12 ஆவணி 2026 புதன் 08:19 | பார்வைகள் : 162
தமிழக சட்டசபை தீர்மானங்கள் குறித்து, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் கூறியதாவது: 'நீட்' தேர்வுக்கு முன், பணம் இருந்தால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., சேர முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், நீட் தேர்வு வந்த பின், தகுதி மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே சேர முடியும். இதனால், மருத்துவ கல்வியின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்கள் எந்த நுழைவுத் தேர்வையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள். நீட் தேர்வை எதிர்ப்பது, நம் தமிழக மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடும்.
இதனால், தேசிய, சர்வதேச அளவிலான, நுழைவு, போட்டித் தேர்வுகளை எழுத, தமிழக மாணவர்கள் மன தளவில் தயங்கும் நிலை ஏற்படும். நீட் தேர்வு உலக அளவில், நம் நாட்டு மருத்துவர்களுக்கு அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. அரசியலுக்காக நீட் தேர்வை எதிர்ப்பவர்கள், இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எப்.சி.ஆர்.ஏ., சட்டத்தை பா.ஜ., அரசு கொண்டு வரவில்லை. 1976, 2010ல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தில் திருத்தம் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், காப்பகங்கள் நடத்த, வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு நிதி வேண்டுமானாலும் பெறலாம்; அதற்கு எந்த தடையும் இல்லை.
ஆனால், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் பல நிறுவனங்கள், அதை மத மாற்றம் செய்யவும், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட தேச நலன்களுக்கு எதிரான செயல்களுக்கும் பயன்படுத்துகின்றன. இவற்றை தடுக்கவே, எப்.சி.ஆர்.ஏ., சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதை திசை திருப்புவதற்காக, எப்.சி.ஆர்.ஏ., சட்டத்தில், 'சர்ச்'களின் சொத்துக்கள் பறிபோகும் என்றும், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களை அரசு கையகப்படுத்தும் என்றும் தவறாக பிரசாரம் செய்கின்றனர். இது முற்றிலும் தவறானது. தேச நலனுக்காக கொண்டு வரப்படும் சட்டங்களை எதிர்ப்பது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire