திமுக-பாஜக கூட்டணி உருவாகிறதா? - வானதி சீனிவாசன் பரபரப்பு பதில்
12 ஆவணி 2026 புதன் 13:46 | பார்வைகள் : 159
திமுக-பாஜக கூட்டணி உருவாகிறதா? என்பது குறித்து வானதி சீனிவாசன் பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
கோவை,கோவையில் பாஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள், தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உருவாகிறதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவிக்காத அவர், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை.
கூட்டணி உருவாகும்போது பார்ப்போம் என்று கூறினார்..மேலும் அவர் கூறும்போது, சட்டம்-ஒழுங்கு இன்னும் மாற வில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கையில் இருப்பவர்கள் மட்டும் மாறி உள்ளனர். பெண்களுக்கு.
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டை நாடலாமே தவிர, நீட் தேர்வு ரத்து என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவது போன்றது.இந்த நீட்தேர்வில் உள்ள பிரச்சினைகளை மத்திய அரசு சரி செய்துள்ளது.
த.வெ.க. அரசு தனி கமிட்டியை அமைத்து, கோவை, மதுரை பகுதிகளுக்கு தகுதியான திட்ட அறிக்கையை கொடுத்து மெட்ரோ ரெயில் வருவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire