கடும் வெப்பம் அலை: Ile de France உட்பட 78 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை!!
12 ஆவணி 2026 புதன் 07:30 | பார்வைகள் : 1220
இந்த கோடைக்காலத்தின் ஐந்தாவது வெப்பஅலை நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி புதன்கிழமை நண்பகல் முதல் 78 மாவட்டங்கள் கடும் வெப்பத்துக்கான ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என Météo France தெரிவித்துள்ளது. எச்சரிக்கைக்குட்பட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 36°C முதல் 39°C வரை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 15 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை Somme, Nord மற்றும் Pas-de-Calais ஆகிய மூன்று மாவட்டங்கள் மட்டுமே கடும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விலகி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலைமை மேலும் மோசமடையும் நிலையில், 80 மாவட்டங்கள் ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. அன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 35°C தாண்டும் என Météo France எச்சரித்துள்ளது.
Centre-Val de Loire முதல் Nouvelle Aquitaine வரையிலான பகுதிகளில் வெப்பநிலை 38°C முதல் 40°C வரை உயரக்கூடும். Île-de-France பகுதியில் சுமார் 38°C வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 2026 ஜனவரி 1 முதல் Paris நகரில் ஏற்கனவே 30°C-க்கும் அதிகமான வெப்பநிலை பதிவான 42 நாட்கள் கடந்துள்ளன. இதன் மூலம் 1947ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 39 நாட்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் தற்போதைய வெப்பஅலை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire