Paristamil Navigation Paristamil advert login

கொலம்பியாவில் 250-ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை

கொலம்பியாவில் 250-ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை

12 ஆவணி 2026 புதன் 13:00 | பார்வைகள் : 315


கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி 7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தினால் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

சில கட்டடங்கள் முற்றாக இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.