Paristamil Navigation Paristamil advert login

கொலம்பியாவில் 38 மணி நேரத்தின் பின் மீட்கப்பட்ட பெண்

கொலம்பியாவில் 38 மணி நேரத்தின் பின் மீட்கப்பட்ட பெண்

13 ஆவணி 2026 வியாழன் 09:43 | பார்வைகள் : 294


கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை 7.4 மெக்னிடியூட் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவானோர் காயமடைந்ததோடு, காணாமலும் போயுள்ளனர்.

பெரெய்ரா (Pereira) நகரில் நிலநடுக்கத்தினால் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று முழுமையாக இடிந்து விழுந்தது. இதில் டேனியேலா (Daniela) என்ற 32 வயதுடைய தாய் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.

தனது மகனின் 12ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமான வேளையிலேயே அவர் இந்த விபத்தில் சிக்கினார். சுமார் 38 மணிநேரமாக கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவரை மீட்பதற்காக, பல மீட்புக் குழுவினரும் சுமார் 50 தன்னார்வலர்களும் இணைந்து 10 மணிநேரப் போராட்டத்தின் பின் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று அவரது மகன், பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் தனது தாத்தா-பாட்டி வீட்டில் தாயின் (டேனியேலா) வருகைக்காகக் காத்திருந்தார்.

குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக 'மானிசலெஸ்' (Manizales) பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குச் செல்லவே திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், தாய் டேனியேலா இருந்த பகுதியிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டு, அவர் இருந்த கட்டடம் இடிந்து விழுந்தது. அதனால் அவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அந்தப் பெண்ணின் தந்தை, "என் மகள் இந்த துயரத்தை அனுபவித்தமை நெஞ்சை பிளக்கிறது, ஆனால் அவள் உயிருடன் மீட்கப்பட்டது எனக்குள் அளவற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

எனக்கு அவள் மீண்டும் பிறந்ததை போல உணர்கிறேன்" எனத் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.