13 மில்லியன் குடும்பங்கள் வரிப்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்: சராசரியாக 1,057 யூரோக்கள்!!
24 ஆடி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 1842
2025 ஆம் ஆண்டில் அதிகமாக வருமான வரி செலுத்தியவர்களுக்கு, வரித்துறை (DGFIP) ஜூலை மாதம் 24 ஆம் திகதி முதல் வரி மீளளிப்பை (Remboursement) வழங்கத் தொடங்கியுள்ளது. சுமார் 13 மில்லியன் குடும்பங்கள் இந்த மீளளிப்பைப் பெறவுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 1,057 யூரோக்கள் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தொகை பெரும்பாலானோரின் வங்கி கணக்கில் ஜூலை 24 அல்லது ஜூலை 31 அன்று நேரடியாக வரவு வைக்கப்படும்.
2025 ஆம் ஆண்டில் வருமானம் குறைந்தும் அதை உடனடியாக வரித்துறைக்கு தெரிவிக்காதவர்கள், குழந்தை பிறந்த தகவலைப் பதிவு செய்யாததால் கூடுதல் வரிச் சலுகையைப் பெறாமல் இருந்தவர்கள், அல்லது நன்கொடைகள், வீட்டு வேலைக்கான ஊழியர்கள், குழந்தை பராமரிப்பு போன்ற செலவுகளுக்கான வரிச் சலுகைகள் மற்றும் வரிக் கடன் (Crédit d'impôt) பெறத் தகுதியானவர்களும் இந்த மீளளிப்பைப் பெறுவார்கள். தகுதியுள்ளவர்கள் எந்தவித விண்ணப்பமும் செய்யத் தேவையில்லை.
"REMB IMPOT REVENUS" என்ற குறிப்புடன் தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கி விவரங்கள் இல்லாதவர்களுக்கு காசோலை வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டில் பிடித்தம் செய்யப்பட்ட வரி போதுமானதாக இல்லாதவர்கள் மீதமுள்ள வரியைச் செலுத்த வேண்டும். 300 யூரோக்கள் அல்லது அதற்குக் குறைவான தொகை இருந்தால் அது செப்டம்பர் 25 அன்று ஒரே தவணையில் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும். 300 யூரோக்களை விட அதிகமாக இருந்தால், செப்டம்பர் 25, ஒக்டோபர் 26, நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 28 ஆகிய தேதிகளில் நான்கு சம தவணைகளாக தானாகவே வசூலிக்கப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire