Paristamil Navigation Paristamil advert login

அர்ஜென்டினாவை FIFA உலகக் கோப்பையிலிருந்து நீக்க கோரிக்கை

அர்ஜென்டினாவை FIFA உலகக் கோப்பையிலிருந்து நீக்க கோரிக்கை

24 ஆடி 2026 வெள்ளி 08:55 | பார்வைகள் : 154


2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் நடத்தை மற்றும் FIFA சாதகமான இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, உலகம் முழுவதும் ரசிகர்கள் அர்ஜென்டினாவை நிரந்தரமாக உலகக் கோப்பையிலிருந்து நீக்க வேண்டும் என்ற மனுவை தொடங்கினர்.

இந்த மனு, இறுதிப் போட்டிக்கு முன்பே தொடங்கப்பட்டது.

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியபோதும், போட்டி முடிந்தவுடன் வீரர்களிடையே ஏற்பட்ட மோதல்கள், குறிப்பாக லியாண்ட்ரோ பாரேடஸ் ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவை தாக்கிய சம்பவம், அணியின் பெயருக்கு மேலும் களங்கம் ஏற்படுத்தியது.

“Argentina Out” எனப் பெயரிடப்பட்ட இந்த மனுவில் 170 நாடுகளில் இருந்து 2.33 கோடி (23,316,108) கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன. இது உலகளாவிய அளவில் மிக அதிகமாக கையொப்பமிடப்பட்ட மனுக்களில் ஒன்றாகும்.

கின்னஸ் உலக சாதனையில் 2.43 கோடி கையொப்பங்களுடன் “Jubilee 2000” இயக்கம் முதலிடத்தில் உள்ளது. இன்னும் சில நாட்கள் மனு தொடர்ந்திருந்தால், இந்த சாதனையை முறியடித்திருக்கும்.

மனுவில், “வெற்றியாளர் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தால் மற்ற அணிகள் ஏன் விளையாட வேண்டும்? அர்ஜென்டினாவை நீக்கி, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா, 2026 உலகக் கோப்பையில் ரசிகர்களால் “மிகவும் வெறுக்கப்பட்ட அணி” என அழைக்கப்பட்டதாகவும், போட்டி முழுவதும் நடுவர் சாதகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளன.  

இந்நிலையில் அர்ஜென்டினாவின் Defender வீரர் நிக்கோலஸ் ஒடாமெண்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக 139 போட்டிகளில் விளையாடிய Defender வீரர் நிக்கோலஸ் ஒடாமெண்டி (Nicholas Otamendi).

38 வயதாகும் இவர் 2009ஆம் ஆண்டு முதல் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி வருகிறார்.

FIFA 2026 உலகக்கிண்ணத் தொடரிலும் இவர் விளையாடியிருக்கிறார். தற்போது ஒடாமெண்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது பதிவில், "இன்று என் தொழில் வாழ்க்கையின் மிகவும் கடினமான வார்த்தைகளை நான் எழுத வேண்டியுள்ளது. விதிவசத்தால் எனது கடைசிப் போட்டி ஒரு உலகக்கிண்ண இறுதிப் போட்டியாக அமைந்தது. இது நாங்கள் விரும்பிய முடிவு அல்ல.

ஆனாலும், இந்த அணி கடைசி நொடி வரை தங்களால் இயன்ற அனைத்தையும் கொடுத்தது என்பதை அறிந்து, நான் தலைநிமிர்ந்து விடைபெறுகிறேன். உலக சாம்பியன் ஆகும் கனவை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பளித்த அர்ஜென்டினாவுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணியை உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற ஆதரவு பெருகி வரும் சூழலில், நட்சத்திர வீரரான ஒடாமெண்டியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நன்றி லங்காஸ்ரீ