கணவரை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் என்ன நடக்கும்? ஆய்வில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்கள்!
24 ஆடி 2026 வெள்ளி 10:55 | பார்வைகள் : 279
கணவரைவிட மனைவி அதிகம் சம்பாதிக்கும் குடும்பங்களில் திருமண திருப்தி குறைவதுடன், விவாகரத்து அபாயமும் சற்று அதிகரிக்கலாம் என NBER ஆய்வு தெரிவிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில், கணவரை விட மனைவி அதிகமாக சம்பாதிப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல. உயர்கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்கள் புதிய சிகரங்களை தொட்டு வரும் இந்த காலத்தில், 'குடும்ப பொருளாதாரம் என்றாலே ஆண் தான்' என்ற பழைய விதி மாறி, நிதிப் பொறுப்புகளைத் தம்பதியர் இருவருமே புதுமையான வழிகளில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், மனைவியின் அதிக வருமானம் அவர்களின் திருமண வாழ்க்கையைப் பாதிக்குமா? என்ற கேள்வியும் சமூகத்தில் எழுகிறது.
இதற்கு பல சர்வதேச ஆய்வுகள் சொல்லும் பதில் என்னவென்றால், "பிரச்சனை பணத்தில் இல்லை, பழமைவாத சமூக சிந்தனைகளிலும் வீட்டு வேலைகளை பகிர்வதில் உள்ள ஏற்றத்தாழ்விலும்தான் இருக்கிறது!"
சம்பளம் அல்ல... 'சமூக மைண்ட்செட்'தான் வில்லன்!
அமெரிக்காவின் 'National Bureau of Economic Research' (NBER) நடத்திய ஆய்வில், கணவரை விட மனைவி அதிகம் சம்பாதிக்கும் சில குடும்பங்களில் கணவன்-மனைவிக்கு இடையே திருப்தி குறைவு ஏற்படுவதாகவும், சில நேரங்களில் விவாகரத்துக்கு வழிவகுப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், இதற்கு மனைவியின் வருமானம் காரணமல்ல! "ஆண்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்" என்ற சமூகத்தில் ஆழமாக பதிந்துள்ள பழமைவாத எதிர்பார்ப்புகளே இதற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆணாதிக்க எதிர்பார்ப்பும்... பெண்களின் விட்டுக்கொடுத்தலும்!
இன்றும் பல சமூகங்களில் பொருளாதார பொறுப்பு ஆண்களுக்கே உரியது என்ற எண்ணம் மாறாமல் உள்ளது. இந்த எதிர்பார்ப்புகளால், மனைவியின் வருமானம் அதிகமாகும்போது, சில கணவர்கள் தங்களின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாக உணர்கிறார்கள். அச்சமயத்தில் குடும்பத்தில் விரிசல் வரக்கூடாது என்பதற்காக, சில பெண்கள் தங்களின் வேலை நேரத்தை குறைத்துக் கொள்வது அல்லது குறைவான சம்பளத்தை ஒப்புக்கொள்வது போன்றவற்றை தேர்ந்தெடுக்க நேரிடுகிறது. மாற்றங்களை இருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதபோது, உறவில் இடைவெளி அதிகரிக்கிறது.
கிச்சன் - அலுவலகம் என 'டபுள் டியூட்டி' பார்க்கும் பெண்கள்!
NBER ஆய்வில் வெளிவந்த மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் என்னவென்றால், அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகளும் கூட வீட்டு வேலைகளிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.
வருமானம் அதிகரித்தாலும் சமையல், வீட்டை பராமரித்தல், குழந்தைகளை பார்த்துக்கொள்வது போன்ற பொறுப்புகள் பெண்களிடமே விடப்படுகின்றன. அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை என டபுள் டியூட்டி பார்ப்பது, பெண்களிடையே மிகுந்த மனஅழுத்தத்தையும் தம்பதியரிடையே மோதலையும் உருவாக்குகிறது.
இந்த சூழலை கையாள்வது எப்படி? - தம்பதியருக்கான 3 விதிமுறைகள்
ஒரு உறவின் வெற்றியை வருமான வித்தியாசம் தீர்மானிப்பதில்லை என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இந்தச் சூழலை ஆரோக்கியமாக கையாள சில எளிய வழிகளை பரிந்துரைக்கின்றனர்.
"என் பணம், உன் பணம்" என்று பிரிக்காமல், குடும்ப இலக்குகளுக்கான கூட்டு பட்ஜெட்டை உருவாக்குங்கள். பண விஷயங்களை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படையாகப் பேசுங்கள்.
வருமானம் யார் மூலம் அதிகமாக வருகிறது என்பதை தாண்டி, சமையல் முதல் வீட்டைப் பராமரிப்பது வரை அனைத்து வேலைகளையும் இருவருமாக ஒருவரின் தொழில்முறை வளர்ச்சியை மற்றவர் மனதார கொண்டாடுங்கள். முடிவுகளை எப்போதும் இணைந்து எடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
"திருமண வாழ்க்கையின் வெற்றி, உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் எண்களை பொறுத்தது அல்ல; இருவரும் ஒருவரையொருவர் சமமான கூட்டாளியாக மதிக்கும் புரிதலில்தான் இருக்கிறது!"
இறுதியாக சொல்வது என்ன?
மனைவி அதிகம் சம்பாதிப்பது எந்தக் குடும்பத்தையும் பாதிக்காது. உண்மையான பிரச்சனை பழைய சமூக சிந்தனைகள், சமமற்ற வீட்டு வேலைகள் மற்றும் பேச்சின்மையில்தான் இருக்கிறது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவரை சமமான கூட்டாளியாக மதித்து நடந்துகொண்டால், யார் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது ஒரு பொருட்டே அல்ல!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire