இலங்கையில் அரசுப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவு
24 ஆடி 2026 வெள்ளி 14:20 | பார்வைகள் : 274
2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நிறைவு மற்றும் மூன்றாம் தவணை ஆரம்ப தினங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை (ஜூலை 24) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஜூலை 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும்.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஜூலை 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.
அத்துடன், மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 3ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire