Paristamil Navigation Paristamil advert login

மத்திய அரசின் நடவடிக்கையால் வாயடைத்துப்போன எதிர்க்கட்சிகள் : நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் நடவடிக்கையால் வாயடைத்துப்போன எதிர்க்கட்சிகள் : நிர்மலா சீதாராமன்

25 ஆடி 2026 சனி 08:02 | பார்வைகள் : 140


எதிர்க்கட்சிகளின் கோபத்தை மத்திய அரசின் நடவடிக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது,'' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வினாத்தாள் கசிந்த போது முதலில் நான் பாதிக்கப்பட்டேன் என சில இளைஞர்கள் முதலில் கூறினர். ஆனால்,பிறகு  இதனை சாதகமாக பயன்படுத்தி, தேர்வுக்கு இன்னும் தயார்படுத்திக் கொண்டு எனது  மதிப்பெண்ணை அதிகரித்தேன் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சவாலை எதிர்கொண்டு,  சிறந்த எதிர்காலத்துடன் வந்த இளைஞர்கள் உள்ளனர். இதன் வாயிலாக, அரசு பதிலளித்து உள்ளது. பிரதமரும் பதிலளித்துள்ளார்.

அரசு உடனடியாக செயல்பட்டு, குற்றவாளிகள் உரிய நேரத்தில் கைது செய்யப்பட்டனர். மறு தேர்வு உரிய நேரத்தில் நடத்தப்பட்டு, முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டன.  இதனால், உயர்கல்விக்கான நிறுவனங்களை இளைஞர்கள் தேர்வு செய்து வருகின்றனர்.மாணவர்கள், இளைஞர்கள் தொடர்பான விஷயத்தில், முக்கியமாக தேர்வு விவகாரத்தில், வினாத்தாள் கசிந்து, மறு தேர்வு நடக்கும் போது, தேர்வுக்கு தயாரான மாணவர்கள் பதற்றம் அடைவது அந்த வயதுக்கு உரியது. அரசு இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலோ அல்லது நடவடிக்கை எடுக்காவிட்டாலோ, எதிர்க்கட்சிகள்  கோபம் அடைவார்கள் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துவிட்டார். ஆனால்,எதிர்க்கட்சிகளின் கோபம், அரசின் துரிதமான நடவடிக்கையால் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. உண்மையில், வினாத்தாளை கசிய விட்டவர்கள், அதனை வாங்கியவர்கள், விற்றவர்களுக்கு விரைவாக தண்டனை கிடைக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு முன்னரே, நீட் வினாத்தாளை கசிய விட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.