இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
26 ஆடி 2026 ஞாயிறு 11:41 | பார்வைகள் : 139
இளம் தலைமுறை கேள்விகளை கேட்கிறது. நாம் அவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: நாங்கள் இளைஞர்களாக இருநத காலத்தில் அது கீழ்ப்படிதலின் காலமாக இருந்தது. இப்போதெல்லாம் அப்படி இல்லை. புதிய இளம் தலை முறையினர் கேள்வி கேட்கிறது.
இளம் தலைமுறை கேள்விகளை கேட்கிறது. நாம் அவர்களுக்கு அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். நாம் அவர்கள் மீது மிகுந்த பாசம் காட்ட வேண்டும். அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.
அவர்களுடன் உரையாட வேண்டும். இப்போதெல்லாம் குடும்பங்களுக்குள்ளேயே கூட உரையாடல் நின்றுவிட்டது. குழந்தைகள் அறிவுறுத்தல்களை விட நடத்தை மூலமே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.
இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் அளிக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire