ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் போதையிலும் பொது மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்திய RATP ஓட்டுநர்!!
26 ஆடி 2026 ஞாயிறு 22:49 | பார்வைகள் : 1804
Ivry பகுதியில் RATP பேருந்தை இயக்கிய ஓட்டுநர், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இன்றி மற்றும் போதைப்பொருள் தாக்கத்தின் கீழ் பணியில் இருந்தது தொடர்பாக, 27ம் திகதி திங்கட்கிழமை மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அவர் இயக்கிய பேருந்தின் பக்கக் கண்ணாடி மோதியதில் பாதசாரி ஒருவர் லேசான காயமடைந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
விபத்துக்குப் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகாதது மட்டுமல்லாமல், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் காவலில் எடுக்கப்பட்டார். பின்னர் விசாரணை நடைமுறைகளைத் தொடர்வதற்காக விடுவிக்கப்பட்ட அவர், மேலதிக விசாரணைக்காக மீண்டும் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக RATP நிறுவனம் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், பயணிகளின் பாதுகாப்பு எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படாது எனவும் தெரிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் இன்றியும், போதைப்பொருள் தாக்கத்திலும் ஒருவர் பொதுப் போக்குவரத்து வாகனத்தை இயக்கியிருப்பது தொடர்பாக கடும் அதிர்ச்சி மற்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire