Paristamil Navigation Paristamil advert login

சவூதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஏவுகணை தாக்குதல்

சவூதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஏவுகணை தாக்குதல்

27 ஆடி 2026 திங்கள் 10:29 | பார்வைகள் : 270


சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவூதி அரேபியாவில் உள்ள கிரேக்க இராணுவத்தினர் வான் பாதுகாப்பு தொகுதி மூலம் வெற்றிகரமாக மறித்து அழித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையில், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்க தயாரிப்பான பேட்ரியோட்வான் பாதுகாப்புத் தொகுதியை கிரேக்க இராணுவத்தினர் அங்கு இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று யேமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை கிரேக்க இராணுவப் பணியாளர்கள் உடனடியாகக் கண்டறிந்து, வான் பாதுகாப்புத் தொகுதியைப் பயன்படுத்தி நடுவானில் வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.