எம்எல்ஏக்களை வாங்குவதே தவெக அரசின் முழு நேரப்பணி; உதயநிதி குற்றச்சாட்டு
28 ஆடி 2026 செவ்வாய் 09:14 | பார்வைகள் : 149
எம்எல்ஏக்களை வாங்குவதையே முழு நேர பணியாக தவெக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி சிறைக்கு சென்று மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து பேசினார். அவர் அளித்த பேட்டி;
பழிவாங்க வேண்டும் என்பதே அரசின் ஒரே பணியாக அவர்கள்(தவெக அரசை குறிப்பிடுகிறார்) பார்க்கின்றனர். தவெக கட்சி நிர்வாகிகளே இன்றைக்கு பல்வேறு புகார்களை சொல்லி வருகின்றனர். அதை பற்றி எல்லாம் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முழுக்க, முழுக்க திமுகவும், எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களையும், அதிமுக எம்எல்ஏக்களை சோபா கொடுத்து வாங்குவதையே இந்த அரசு முழு நேர பணியாக செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு உதயநிதி கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire