ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை மறைக்க பாக்., முயற்சி: மத்திய வெளியுறவு அமைச்சகம்
29 ஆடி 2026 புதன் 07:56 | பார்வைகள் : 122
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை தேர்தல் என்ற பெயரில் மறைக்க பாகிஸ்தான் முயற்சி செய்கிறது ,'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடந்ததாக சொல்லப்படும் செய்திகளை நாங்கள் அறிந்துள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. அனைவரும் அறிந்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளடக்கிய ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் மற்றும் பிரிக்க முடியாதவை.
தற்போது தேர்தல் என்ற பெயரில், தனது சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை மூடி மறைக்கவும், அப்பகுதியில் நிகழ்த்தப்படும் கடுமையான மனித உரிமை மீறல்களை மறைக்கவும் பாகிஸ்தான் செய்யும் முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை. பொருளாதார சுரண்டல், மக்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுப்பதாலும் நிர்வாக செயல்பாடுகள் காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire