Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பலி

வவுனியாவில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பலி

29 ஆடி 2026 புதன் 14:30 | பார்வைகள் : 142


வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று (27) திங்கட்கிழமை குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

குழந்தையின் தாய் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார். உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக (பிரேத பரிசோதனை) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.