டில்லி போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டது; மத்திய அரசு
30 ஆடி 2026 வியாழன் 10:52 | பார்வைகள் : 344
டில்லி போராட்டத்தில் கண்ணீர்புகை குண்டு மட்டுமே வீசப்பட்டது, துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
டில்லி போராட்டத்தின் போது போலீசார் வரம்பு மீறி தாக்குதல்கள் நடத்தியதாக பார்லி.யில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தப்படவில்லை. கண்ணீர் புகை குண்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று மீண்டும், மீண்டும் தெளிவுபுடுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிபதியிடம்தான் உள்ளது. அமைச்சர்களிடம் அல்ல.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பார்லிமெண்ட் மரபுக்கு ஒவ்வாத மொழியை பயன்படுத்தி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நாட்டின் இளைஞர்களை முட்டாள்கள் என்று அழைப்பதை விட துரதிருஷ்டவசமானது வேறு என்ன இருக்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire