மாற்றுப் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு 70 யூரோக்கள் அபராதம்: தவறை ஒப்புக்கொண்ட RATP!!
30 ஆடி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 2816
RER C வழித்தடத்தில் நடைபெற்று வரும் கோடைக்கால பராமரிப்பு பணிகளால் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டதால், Ghislaine என்ற பெண் மாற்றுப் பேருந்தில் பயணம் செய்தார். ஆனால், அந்தப் பயணத்திற்குத் தேவையான சரியான பயணச்சீட்டு இல்லாததாகக் கூறி கட்டணப் பரிசோதகர்கள் அவருக்கு 70 யூரோக்கள் அபராதம் விதித்தனர்.
குறித்த பெண், RER சேவை இல்லாததால் மாற்று போக்குவரத்தாக பேருந்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், அதற்காக தனியாக வேறு வகை பயணச்சீட்டு தேவைப்படும் என்பது குறித்து தெளிவான தகவல் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து RATP, அபராதம் விதிக்கப்பட்டது நிர்வாகப் பிழை காரணமாக ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டு, வசூலிக்கப்பட்ட 70 யூரோக்கள் தொகையை முழுமையாகத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாத வகையில் பயணிகளுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படும் என்றும் RATP தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire