அர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் - 7 பேர் பலி
30 ஆடி 2026 வியாழன் 07:16 | பார்வைகள் : 556
அர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜூவான் மாகாணத்தில் மீட்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சான் ஜூவானின் இஷிகுவாலாஸ்டோ இயற்கை பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க மீட்பு ஹெலிகாப்டர் சென்றதாகவும், அப்போது பெல் 412 ரக ஹெலிகாப்டர் ஆபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த அனைவரும் தீயணைப்பு, காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு பணியாளர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை காலை ஹெலிகாப்டர் ஆனது தன்னுடைய இணைப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
சான் ஜூவான் மாகாண ஆளுநர் மார்செலோ ஒர்ரெகோ, நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தையும், அதில் 7 பேர் வரை உயிரிழந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire