Paristamil Navigation Paristamil advert login

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

30 ஆடி 2026 வியாழன் 14:09 | பார்வைகள் : 705


தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைவாக, குறித்த மனுவை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அன்றைய வழக்கில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இந்த மனு ஜனவரி 19, 2027 அன்று விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.