வேலை விபத்துக்களுக்கான இழப்பீட்டை குறைக்க அரசு திட்டம்!!
30 ஆடி 2026 வியாழன் 17:14 | பார்வைகள் : 1989
பொது நிதி பற்றாக்குறையை, குறிப்பாக சமூகப் பாதுகாப்புச் செலவுகளை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, வேலை விபத்துகளால் ஏற்படும் வேலைநிறுத்தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை குறைக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே மருந்துகளுக்கான செலவுத்திருப்பிச் செலுத்துதலை 1.2 பில்லியன் யூரோக்கள் அளவிற்கு குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது வேலை விபத்துகளுக்கான இழப்பீட்டில் மேலும் 800 மில்லியன் யூரோக்களை சேமிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த 800 மில்லியன் யூரோக்களை சேமிக்க அரசு மூன்று வழிகளை முன்வைத்துள்ளது. சமூகப் பங்குதாரர்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர்.
அந்த மூன்று முன்மொழிவுகள்:
- வேலைநிறுத்த காலத்தில் வழங்கப்படும் தினசரி இழப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பை குறைத்தல்.
- தற்போது வரிவிலக்கு பெற்றுள்ள இந்த இழப்பீடுகளுக்கு வரி விதித்தல்.
- நிறுவனங்கள் செலுத்தும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு (cotisations) கட்டணத்தை, ஒவ்வொரு கிளையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், முழு நிறுவனத்தின் அளவில் கணக்கிடுதல்.
இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால்:
- வேலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் இழப்பீடு குறையும்.
- நிறுவனங்கள் அதிக பங்களிப்பு செலுத்த வேண்டியிருக்கும்.
- ஆனால் வேலை விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பெரிதாக மாற்றம் இருக்காது.
பிரான்சில் வேலை விபத்துகள் அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்கள்:
- கட்டுமானம் (BTP), தளவாடம் (Logistique), வேளாண்மை மற்றும் தொழில்துறை போன்ற அதிக ஆபத்துள்ள துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புகள்.
- தசை மற்றும் எலும்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் (Musculo-squelettiques) அதிகமாக ஏற்படுதல்.
- துணை ஒப்பந்த (Sous-traitance) மற்றும் தற்காலிக (Intérim) பணியாளர்களை அதிகமாக பயன்படுத்துதல்.
- சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (PME) வேலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் போதுமான அளவில் இல்லாதது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire