Paristamil Navigation Paristamil advert login

செந்தில் பாலாஜி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

செந்தில் பாலாஜி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

31 ஆடி 2026 வெள்ளி 08:22 | பார்வைகள் : 505


டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 28 அன்று லஞ்ச ஒழிப்புத் துறை,செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் ஊழல் புகாரில் எப்ஐஆர் பதிவு செய்தது.

அதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்  உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யபட்டதுடன், நாளை (ஜூலை 31) அவசர வழக்காக விசாரிக்கவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு,தன் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் எந்த ஒரு  உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்ற அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.