ஜெர்மனியில் கடும் வெப்பம் - 9,800 பேர் பலி
31 ஆடி 2026 வெள்ளி 12:57 | பார்வைகள் : 765
ஜெர்மனியில் இந்த ஆண்டில் இதுவரை நிலவிய வெப்ப அலைகள் மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ரொபர்ட் கோச் நிறுவனம் (RKI) தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் பல பகுதிகளில் மீண்டும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும்.
இந்நிலையில், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பம் தொடர்பான உயிரிழப்புகளில் அதிகமானோர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்கள் என ரொபர்ட் கோச் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸைத் தாண்டும் காலப்பகுதிகளில் உயிரிழப்பு வீதம் கணிசமாக அதிகரிப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கோடைகாலத்தில் ஏற்படும் வெப்ப அலைகள் மேலும் அதிக உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ள ரொபர்ட் கோச் நிறுவனம், குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire