போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை
31 ஆடி 2026 வெள்ளி 19:12 | பார்வைகள் : 593
போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று நுழைந்து வீழ்ந்து நொறுங்கியதால், அங்கு நேட்டோ போர் வானூர்திகள் அவசரமாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியாழக்கிழமை அதிகாலையில் போலந்து வான்வெளிக்குள் நுழைந்த இந்த ஏவுகணை, இரவோடு இரவாக யுக்ரைன் மீது ரஷ்யா ஏவிய பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலின் ஒரு பகுதி என்று கருதப்படுகிறது.
இதில் சிறுவர்கள் உட்பட குறைந்தது எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏவுகணை தென்பட்டதைத் தொடர்ந்து, போலந்து உட்பட நேட்டோ உறுப்பு நாடுகள், ஜெட் வானூர்திகளையும்,வான்வழி எரிபொருள் நிரப்பும் வானூர்தியையும், வான்வழி முன்னெச்சரிக்கை வானூர்தியையும் களமிறக்கியதாக நேட்டோ கூட்டணியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது பிராந்தியத்தைப் பாதுகாக்க நேட்டோ அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire