Ceuta வழியாக ஐரோப்பாவுக்குள் ஆயிரக்கணக்கான குடியேறிகள் நுழைவு: ஸ்பெயின் எல்லைக் கண்காணிப்பை வலுப்படுத்த ஜனாதிபதி மக்ரோன் உத்தரவு!!
31 ஆடி 2026 வெள்ளி 14:16 | பார்வைகள் : 2239
ஸ்பெயினின் Ceuta பகுதி வழியாக சுமார் 40,000 சட்டவிரோத குடியேறிகள் ஐரோப்பிய பகுதிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் தனது ஸ்பெயின் எல்லைக் கண்காணிப்பை மேலும் கடுமையாக்க தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், உள்துறை அமைச்சருக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து ஸ்பெயின் எல்லையில் பாதுகாப்பு சோதனைகளை வலுப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Ceuta எல்லையை நீந்திக் கடக்க முயன்றதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்பெயின் கோரிக்கை விடுத்தால், Frontex அமைப்பின் மூலமாகவும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். இதனுடன், 2020 ஆண்டு முதல் ஸ்பெயின் எல்லையில் பாதுகாப்புப் படைகளை இரட்டிப்பாக்குதல், 2024-ஆம் ஆண்டு Schengen விதிமுறைகளில் திருத்தம் செய்து எல்லைக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல், கூட்டு எல்லைப் படைகள் மற்றும் ஸ்பெயின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் போன்றவை ஏற்கனவே அமலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரான்ஸ்–ஸ்பெயின் எல்லையில் கண்காணிப்புகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார். மறுபுறம், பின்லாந்து, இந்த பெருமளவிலான சட்டவிரோத நுழைவைத் தொடர்ந்து ஸ்பெயினுக்கு எதிராக Schengen பகுதியை மூட வேண்டும் என்ற இத்தாலியின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez, இந்த சம்பவத்தை "ஸ்பெயினின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான தாக்குதல்" என்று கடுமையாகக் கண்டித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire