Paristamil Navigation Paristamil advert login

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்

31 ஆடி 2026 வெள்ளி 15:38 | பார்வைகள் : 614


இந்தியாவைச் சேர்ந்த பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி வியாழக்கிழமை (30) பெங்களூருவில் தனது 88வது வயதில் காலமானார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் 6000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். 
“பாட்டொன்று கேட்டேன்...”, “மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா....”, “நான் சிரித்தால் தீபாவளி...”, “புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்...” போன்ற பல பாடல்களை பாடி பிரபலமானவர் ஜமுனா ராணி.

1946இல் வெளியான “தியாகய்யா” என்ற தெலுங்கு படத்தின் மூலமாக இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். 

தமிழில் 1952இல் வெளியான “கல்யாணி” என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் நேற்றைய தினம் வியாழக்கிழமையே நடைபெற்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.