Paristamil Navigation Paristamil advert login

1.06 லட்சம் நீர் நிலைகளில் 50,197ஐ காணவில்லை: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

1.06 லட்சம் நீர் நிலைகளில் 50,197ஐ காணவில்லை: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

1 ஆவணி 2026 சனி 05:14 | பார்வைகள் : 492


ஆகஸ்ட் முழுதும் மரம் நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும்' என, 'வீ த லீடர்ஸ்' அமைப்பினருக்கு, அதன் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோ பதிவு:

இந்தியாவில், தமிழகத்தில் தான், நகரங்களில் அதிக மக்கள் வாழுகின்றனர். கடந்த 1970 முதல் 2015 வரை, 45 ஆண்டுகளில் பூமியின் வெப்ப நிலை, 0.2 டிகிரி அதிகரித்தது. ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில், 0.35 டிகிரி அதிகரித்துள்ளது.

சென்னையில் 67 சதவீதம் இடங்களி கட்டுமானம் வந்து விட்டது; 10 சதவீத இடத்தில் தான் பசுமை இருக்கிறது. 'ஏசி' இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. தமிழகத்தில் 1.06 லட்சம் நீர்நிலைகளில், 50,197ஐ காணவில்லை. ஆறுகள் மாசு அடைந்து விட்டன. காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.

தென் மாநிலங்களிலேயே அதிகமாக நிலத்தடி நீரை தமிழகம் தான் உறிஞ்சுகிறது. வரும் 2050ல் கோவை, கன்னியாகுமரியை தவிர, பிற மாவட்டங்களில் குடிக்க கூட தண்ணீர் இருக்காது. எனவே, ஆகஸ்ட் முழுதும் மரம் நடுதல், நீர் நிலைகளை சுத்தம் செய்தல் போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளை, 'வீ த லீடர்ஸ்' உறுப்பினர்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு வீடியோவில் அண்ணாமவை கூறியுள்ளார்.