Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை

இலங்கையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை

31 ஆடி 2026 வெள்ளி 19:06 | பார்வைகள் : 645


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை, கடமையைப் புறக்கணித்தமை மூலம் கொலை செய்தமை மற்றும் கொலை செய்ய முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதே குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டில் குறித்த வழக்கிலிருந்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்து மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்களை மீண்டும் அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.