பிரதமர் கிஷான் திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 ஆவணி 2026 சனி 10:06 | பார்வைகள் : 412
மிதக்கும் சூரிய மின்தகடுகள் அமைக்கும் திட்டம், பிரதமர் கிஷான்(விவசாயிகளுக்கு நிதியுதவி) உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.4.4 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.இந்த கூட்டத்தில்
பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா திட்டம்- 5,070 கோடி
பிரதமர் கிஷான் சமன் நிதி-ரூ.3,15,614 கோடி
கேலோ இந்தியா திட்டம் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு நிதியுதவி திட்டம் - ரூ.36,441 கோடி
சமுத்ரா மந்தன் - ரூ.84,084 கோடி என மொத்தம் ரூ.4,41, 209 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா திட்டம்
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்தத் திட்டத்தின்படி நீர்நிலைகள், வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் குளங்கள் மீது சூரிய மின் தகடுகள் அமைத்து சூர்ய மின்சக்தி உற்பத்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது 700 மெகாவாட் மிதக்கும் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதனை அடுத்த 5 ஆண்டுகளில் 7 மடங்காக உயர்த்தி 5 ஆயிரம் மெகாவாட் மிதக்கும் சூரிய மின் தகடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கூடுதல் நிலங்கள் கையகப்படுத்த தேவையில்லை. இருக்கும் நீர்நிலைகள், கால்வாய்கள் மற்றும் குளங்களை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை பெருக்க முடியும். இதனால், மாசுபாடும் செலவும் குறையும். மேலும், நீர்நிலைகளில் நீர் ஆவியாதல் குறையும். பாசனம், தொழில்துறை மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் சேமிக்கப்படும்.
விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமர் கிஷான் திட்டத்தை 2026-27 முதல் 2030- 31 வரையிலான அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,15,614 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்தி அனைவரையும் உள்ளடக்கிய திறமை மேம்பாடு, கல்வியுடன் ஒருங்கிணைப்பு, விளையாட்டு அறிவியல் ஆகியவை வாயிலாக நாட்டின் விளையாட்டு சூழலை மாற்றியமைக்கும் கேலோ இந்தியா திட்டத்திற்கு அடுத்த ஐந்துஆண்டுகளுக்கு ரூ.29,054 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல் தடகள போட்டிகளுக்கான ஏற்பாடுகள், சிறந்த நிர்வாகம், மற்றும் உலக தரத்தில் போட்டிகளை நடத்த தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்க ரூ.7,387 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ஏழு மடங்கு அதிகமான நிதியாகும்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியவும் உருவாக்கப்பட்ட சமுத்ர மந்தன் திட்டத்துக்கு ரூ.84,084 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நாட்டில் விளையாட்டு கலாசாரத்தை ஊக்குவிப்பதில் எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 'கேலோ இந்தியா' திட்டத்தை விரிவுபடுத்தவும், தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்குச் சிறந்த பயிற்சி, நவீன வசதிகள் மற்றும் தங்கள் திறமைகளை மெருகேற்றிக்கொள்ளக் கூடிய கூடுதல் வாய்ப்புகளை வழங்கும்.
நாடு முழுவதும் உள்ள நமது விவசாய சகோதர சகோதரிகளின் மேம்பாட்டிற்கும் செழிப்புக்கும் நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.
'பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தை 2030-31ம் ஆண்டு வரை நீட்டிக்க இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், விதைகள், உரங்கள் மற்றும் பிற விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள விவசாயிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பொருளாதார நலனையும் மேம்படுத்துகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire