Paristamil Navigation Paristamil advert login

ஆக.,3ல் 13 பேர் கொண்ட குழு உடன் கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

ஆக.,3ல் 13 பேர் கொண்ட குழு உடன் கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

1 ஆவணி 2026 சனி 11:09 | பார்வைகள் : 448


காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகா முதல்வருடன் பேச்சு நடத்த ஆக.,3ம் தேதி13 பேர் கொண்ட குழு உடன் முதல்வர் விஜய் கர்நாடகா செல்கிறார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு, காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகா முதல்வருடன் பேச்சு நடத்த ஆக.,3ம் தேதி பெங்களூருவுக்கு முதல்வர் விஜய் செல்கிறார் என அறிவிப்பு வெளியானது. அவருடன் செல்லும் 13 பேர் கொண்ட குழுவினர் பெயர் விவரம் வெளியானது.

யார் அந்த 13 பேர்

* அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார்
* தலைமை செயலாளர் சாய்குமார்
* முதல்வரின் செயலாளர்கள் செந்தில்குமார், லட்சுமி பிரியா
* அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயணன்
* மூத்த வக்கீல் ஜி.உமாபதி
* முதல்வரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி.
* நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு

மற்றும் தலைமைப் பொறியாளர், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர்