Paristamil Navigation Paristamil advert login

மரண தண்டனை - சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ

மரண தண்டனை - சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ

31 ஆடி 2026 வெள்ளி 19:29 | பார்வைகள் : 999


மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் இன்று (31) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.