பொதுமக்கள் தரும் எந்த ஒரு மனுவும் 30 நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது!அரசு உத்தரவு
1 ஆவணி 2026 சனி 14:37 | பார்வைகள் : 485
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களும், 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடாது; தங்களது துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து, அமைச்சர்களுக்கு அவ்வப்போது தகவல்கள் வழங்க வேண்டும்' என, அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறைகளின் தலைவர்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, அனைத்து துறை செயலர்களுடன், தலைமை செயலர் சாய்குமார் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில், பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதன் விபரம்: பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் உரிய முறையில் தீர்வு காண வேண்டும்.
மனுக்களின் தீர்வு நிலை குறித்து, துறை தலைவர்கள் வாரம்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். எந்த மனுவும், 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக்கூடாது.
ஏற்கனவே, அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி, துறை தலைவர்கள் ஒவ்வொரு மாதமும் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதுடன், ஆய்வு அறிக்கைகளை உடனுக்குடன் அனுப்ப வேண்டும்.
கண்காணிப்பு அதிகாரிகள் மாதம்தோறும் களப்பணிகளை மேற்கொண்டு, தங்களது அறிக்கைகளை, பொதுத்துறை வாயிலாக, தலைமை செயலருக்கு அனுப்ப வேண்டும்.
அனைத்து அரசாணைகளும் எந்தவித தாமதமும் இன்றி, சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
கவர்னர் உரை அறிவிப்பு களுக்கான அரசாணைகள் உடனே வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு துறை தலைவரும், 'உங்கள் அரசை தெரிந்து கொள்ளுங்கள்' திட்டத்திற்காக தகவல் தொழில்நுட்ப துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட, ஒரு தொடர்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.
எல் நினோ என்ற காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சி நிலையை எதிர்கொள்ள தேவையான, அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதுதொடர்பாக, மாவட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
தகவல்கள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட வேண்டிய மானியங்கள் மற்றும் நிலுவை தொகைகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை, செயலர்கள் மற்றும் துறை தலைவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
துறை தலைவர்கள், செயலர்கள் தங்களது துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு, அவ்வப்போது தகவல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக, அந்த உயரதிகாரி கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire