Paristamil Navigation Paristamil advert login

மஹர சிறைச்சாலையில் பதற்றம் - நிலைமையை கட்டுப்படுத்த படையினர் களத்தில்!

மஹர சிறைச்சாலையில் பதற்றம் - நிலைமையை கட்டுப்படுத்த படையினர் களத்தில்!

1 ஆவணி 2026 சனி 15:28 | பார்வைகள் : 680


மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைக் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியதை தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலை பதற்றத்துக்கு மத்தியில் சிறைச்சாலை கட்டடத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அங்கு நிலவி வரும் அசாதாரண நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட படையினர், இராணுவத்தினர் மற்றும்  கடற்படையினர் சிறைச்சாலைக்குள் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.