Paristamil Navigation Paristamil advert login

பரிஸில் Bank of America மீது தாக்குதல் சதி முறியடிப்பு: பெல்ஜியப் பெண் கைது!!

பரிஸில் Bank of America மீது தாக்குதல் சதி முறியடிப்பு: பெல்ஜியப் பெண் கைது!!

1 ஆவணி 2026 சனி 16:18 | பார்வைகள் : 1523


பரிஸில் உள்ள Bank of America வங்கியின் தலைமையகத்தை குறிவைத்து திட்டமிடப்பட்ட தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 24 வயதுடைய பெல்ஜியப் பெண், பெல்ஜிய அதிகாரிகளால் பிரான்சுக்கு ஒப்படைக்கப்பட்டு, பயங்கரவாதச் சதி மற்றும் வெடிபொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்காலிகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சிறார்கள். சந்தேகநபர்கள், வங்கியின் முன் கையால் தயாரிக்கப்பட்ட வெடிகருவியை வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், அதை வீடியோவாக பதிவு செய்யும்படி சில இளைஞர்களுக்கு 500 முதல் 1,000 யூரோக்கள் வரை பணம் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின்படி, தாக்குதல் முயற்சி முதலில் மார்ச் 26 இரவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அங்கு இருந்த காவல்துறை வாகனம் காரணமாக அது தோல்வியடைந்தது. அடுத்த இரவு மீண்டும் முயற்சி செய்யப்பட்டபோது காவல்துறையினர் தலையிட்டு திட்டத்தை முறியடித்தனர். பயன்படுத்த திட்டமிடப்பட்ட வெடிகருவி பெரிய தீப்பரவலை ஏற்படுத்தும் ஆபத்துடையதாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சதி, Harakat Ashab al-Yamin al-Islamiya (HAYI) என்ற ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குழுவுடன் இணைந்திருக்கலாம் என்று பிரான்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (PNAT) தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து சர்வதேச நீதித்துறை ஒத்துழைப்பின் கீழ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.