Paristamil Navigation Paristamil advert login

ராகமவில் உடனடியாக அமுலுக்கு வந்தது பொலிஸ் ஊரடங்கு

ராகமவில் உடனடியாக அமுலுக்கு வந்தது பொலிஸ் ஊரடங்கு

1 ஆவணி 2026 சனி 18:42 | பார்வைகள் : 652


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வந்தது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

மஹாரா சிறைச்சாலையின் சில கைதிகள் தப்பித்திருக்கலாம் என்ற தகவல்களையடுத்து, ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உடனடியாக அமுலாகும் வகையில் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு ட்ரோன்கள் அப்பகுதியைச் சுற்றி வளைத்துப் கண்காணித்து வருகின்றன.

மஹர சிறைச்சாலை வளாகத்தில் இன்று (1) பிற்பகல் திடீரென ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகக் காயமடைந்த சிறைக் கைதிகளில் 7 பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.