கத்தியுடன் சுகாதார அமைச்சகத்திற்குள் நுழைந்த நபர் கைது!!
1 ஆவணி 2026 சனி 21:33 | பார்வைகள் : 1533
பரிஸ் சுகாதார அமைச்சகக் கட்டிடத்திற்குள் நள்ளிரவில் சமையலறை கத்தியுடன் ஒருவர் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவசரமாக வெளியேறும் கதவு வழியாக உள்ளே சென்ற அவர், சுமார் 40 அலுவலகங்களில் தேடி, பல மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகளை திருடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு கேமரா பதிவுகள் மூலம் அவரது நடமாட்டம் கண்டறியப்பட்டது. பாதுகாப்பு பணியாளர்கள் தடுக்க முயன்றபோது, அவர் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
தப்பிச் செல்ல முயன்ற அந்த நபரை காவல் துறையினர் விரைவாக கைது செய்தனர். அவர் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire