இளைஞர்களிடம் பயங்கரவாத கருத்துக்களை புகுத்த அரபிக் கல்லுாரி பெயரில் வசூல்
2 ஆவணி 2026 ஞாயிறு 06:41 | பார்வைகள் : 450
கோவை அரபிக் கல்லுாரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி, இளைஞர்களிடம் பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிடப்பட்டு உள்ளதாக, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை, கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே, 2022 அக்., 23ல் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், ஜமேஷா முபீன் என்ற தற்கொலைப்படை பயங்கரவாதி உயிரிழந்தார். இதுகுறித்து, தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதில், நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.
அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், ஜமேஷா முபீன் இறப்பதற்கு முன், ஐ.எஸ்., அமைப்புக்கு விசுவாச பிரமாணம் செய்திருந்தது உறுதியானது.மேலும், பயங்கரவாத பிரசாரம் செய்து வந்த முகமது அசாருதீன் என்பவரின் கைதுக்கு பழிவாங்கவே, ஜமேஷா முபீன் மற்றும் அவனது கூட்டாளிகள், இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய, 12 பேரும் கோவை அரபு கல்லுாரி நிறுவனர் ஜமீல் பாஷாவின் மாணவர்கள்.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டப்பட்ட விதம் குறித்து, அமலாக்கத்துறை, கடந்த மாதம் 30ம் தேதி சென்னை, கோவை, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில், 15 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து, அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அமலாக்கத்துறை சோதனையில், புதிய மோசடி அம்பலமாகியுள்ளது. வழக்கில் தொடர்புடையவர்கள், 2021 ஆகஸ்ட் முதல் 2022 ஜூன் வரை, போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மும்பையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடம் பணம் பெற்று, சட்ட விரோதமாக சான்றிதழ்களை வழங்கியுள்ளனர். இந்த மோசடி வாயிலாக ஈட்டப்பட்ட பெருந்தொகை, குண்டு வெடிப்புக்கான வெடிபொருட்கள் வாங்கவும், கோவை அரபு கல்லுாரி செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், ஜமீல் பாஷா தன் முன்னாள் மாணவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற நபர்களிடமிருந்து நன்கொடைகள் மற்றும் வணிக முதலீடுகள் வாயிலாக, சென்னை அரபிக் கல்லுாரி, கோவை அரபிக் கால்லுாரி செயல்பாடுகளுக்காக நிதி திரட்டினார்.
இளைஞர்களிடம் பயங்கரவாத கருத்துக்களைப் புகுத்தும் நோக்கத்துடன், அரபு மொழி கல்வி என்ற போர்வையில் இணையவழி மற்றும் நேரடி வகுப்புகள் நடத்த, இந்நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்லுாரிகள் வாயிலாக, ஜமீல் பாஷா ஈட்டிய வருவாய், அரபு மொழி வகுப்புகளை ஏற்பாடு செய்யவும், வெளிநாட்டு பயணங்கள், தனிப்பட்ட செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனையில், மொபைல் போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட, 'டிஜிட்டல்' சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அசையாச் சொத்து முதலீடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சதித் திட்டத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும், வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்தும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire