வீடுகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்; முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
3 ஆவணி 2026 திங்கள் 09:47 | பார்வைகள் : 400
மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் வீடு வீடாக சென்று வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. இப்பணி வரும், 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பணியில், 1.15 லட்சம் பணியாளர்கள், 19,000 மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் கண்காணிக்க உள்ளனர்.
கணக்கெடுப்பின் போது, வாகனங்களின் விபரங்கள், கார் இணைப்புகளின் எண்ணிக்கை, மொபைல் போன், குடிநீர் ஆதாரம், கழிப்பறை மற்றும் குளியலறை வசதி, குடும்பத்தினர் பயன்படுத்தும் முக்கிய தானியம் உட்பட, மொத்தம், 33 முக்கிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தத் தகவல்கள் அனைத்தும் மொபைல் போன் செயலியில் சேகரிக்கப்பட்டு, 100 சதவீதம், 'டிஜிட்டல்' முறையில் பதிவு செய்யப்படுகின்றன.
இது குறித்து, தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் சுந்தரேஷ் பாபு கூறியதாவது:
கணக்கெடுப்பில் குடியிருப்புகளில் மட்டுமின்றி, பள்ளிகளிலும் கணக்கெடுப்பு நடத்தப்படும். முதல் கட்டத்தில் வீடு, வீடு சார்ந்த கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். இரண்டாம் கட்டத்தில் தான், மக்கள் சார்ந்த கேள்வி கேட்கப்படும்.
சேகரிக்கப்படும் தரவுகள் அனைத்தும் நாட்டின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பு பணியாளர்களுக்குத் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire