Paristamil Navigation Paristamil advert login

பார்லி. போராட்டத்தில் சனாதன தர்மம் அவமதிப்பு: ராகுல் மீது வழக்கு

பார்லி. போராட்டத்தில் சனாதன தர்மம் அவமதிப்பு: ராகுல்  மீது வழக்கு

2 ஆவணி 2026 ஞாயிறு 10:05 | பார்வைகள் : 487


பார்லி. வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது சனாதனத்தை அவமதித்ததாக கூறி ராகுல் மீது வாரணாசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சில நாட்கள் முன்பு பார்லி. வளாக நுழைவுவாயில் அருகில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ராமல்கோவில் நிதி முறைகேட்டை விளக்கும் விதமாக தெருக்கூத்து பாணியில் நாடகம் ஒன்றை நடத்தினர்.

இந்த நூதன போராட்டத்தை லோக்சபா எம்பி ராகுல் மற்றும் இண்டி கூட்டணி எம்பிக்கள் உடனிருந்து முன்னெடுத்தனர். போராட்டத்தில் பூர்னியா தொகுதி சுயேட்சை எம்பி பப்பு யாதவ், கோயில் பூசாரி போல் வேடமிட்டு நடித்தார். இந்த போராட்டத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந் நிலையில், போராட்டத்தின் போது சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி ராகுல், சுயேட்சை எம்பி ராஜேஷ் ரஞ்சன் (எ) பப்பு யாதவ், சமாஜ்வாதி எம்பி அவதேஷ் பிரசாத் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சில துறவிகள் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காசி துணை கமிஷனர் கவுரவ் பன்சால் தெரிவித்துள்ளார்.