தேசமே முதன்மை என்ற எண்ணத்துடன் இளைஞர்கள் வளர வேண்டும்; பிரதமர் மோடி
2 ஆவணி 2026 ஞாயிறு 11:10 | பார்வைகள் : 505
சமூகம் மற்றும் நாட்டின் நலன்களின் மீது அக்கறை வைக்கும் இளைஞர்களை உருவாக்க வேண்டும். தேசமே முதன்மை என்ற எண்ணத்துடன் இளைஞர்கள் வளர வேண்டும்,' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மைசூருவில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாச்சார இளைஞர் மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது ; சரியான வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களால், சொந்த மண்ணில் தங்களின் கனவுகளை நனவாக்கும் போது மட்டுமே இளைஞர்களின் ஆற்றல் தேசிய சக்தியாக மாறுகிறது. இதில், கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த மையம் ஆன்மிகவாதிகளுக்கும், பக்தர்களுக்கு சிறந்த வழிபாட்டுத் தலமாக மாறும் என்று நம்புகிறேன். இந்த மையத்தின் மூலம் சமூகம் மற்றும் நாட்டின் நலன்களின் மீது அக்கறை வைக்கும் இளைஞர்களை உருவாக்க வேண்டும். தேசமே முதன்மை என்ற எண்ணத்துடன் இளைஞர்கள் வளர வேண்டும்
சுவாமி விவேகானந்தர் நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியைப் போலவே சமத்துவத்தையும் மிக முக்கியமாகக் கருதினார். கல்வியிலோ அல்லது வாய்ப்புகளிலோ எந்தவிதப் பாகுபாடும் இல்லை என்பதை உறுதி செய்வதே, நம் நாட்டின் தொலைநோக்குப் பார்வையாக மாறியுள்ளது. மருத்துவக் கல்வி மற்றும் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் படிப்புகளைத் அவரவர் தாய்மொழியிலேயே தொடர்வதற்கான வசதிகள் தற்போது கிடைக்கின்றன. இது மொழி சார்ந்த வாய்ப்புப் பாகுபாடுகளைத் தடுக்க உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire