Paristamil Navigation Paristamil advert login

எத்தனால் கலப்பு இல்லை என்றால் பெட்ரோல் விலை உயரும்; மத்திய அரசு

எத்தனால் கலப்பு இல்லை என்றால் பெட்ரோல் விலை உயரும்;  மத்திய அரசு

2 ஆவணி 2026 ஞாயிறு 14:16 | பார்வைகள் : 429


எத்தனால் கலப்பு இல்லை என்றால் பெட்ரோல் விலை உயரும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: எத்தனால் கலப்பதன் நோக்கம், எரிபொருள் மலிவாக கிடைப்பதையும், மாறாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதையும், எரிபொருள் இறக்குமதிக்கான பணச் செலவைக் குறைப்பதையும் கொண்டது. எத்தனால் கலக்கப் படவில்லை என்றால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 125 ரூபாய் முதல் 130 ரூபாயை எட்டக்கூடும்.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 135 டாலரை எட்டினால் விலை உயர்வை தவிர்க்க முடியாது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்தால் லிட்டருக்கு ரூ.30 சேமிக்க முடியும். எத்தனால் கலப்பை அனுமதிக்க வில்லை என்றால் விலை உயர்வை நுகர்வோர் தான் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த விளக்கம் வந்துள்ளது.