Paristamil Navigation Paristamil advert login

போராட்டம் வேண்டாம் ; கர்நாடக மக்களிடம் கெஞ்சுகிறார் முதல்வர் சிவகுமார்

போராட்டம் வேண்டாம் ; கர்நாடக மக்களிடம் கெஞ்சுகிறார்  முதல்வர் சிவகுமார்

2 ஆவணி 2026 ஞாயிறு 15:23 | பார்வைகள் : 586


அணைகளில் தண்ணீர் தேக்கினால் நாம் தான் மூழ்குவோம். எனவே, கபினி அணையில் இருந்து வினாடிக்கு, 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் போராட்டம் வேண்டாம்,'' என, கர்நாடக முதல்வர் சிவகுமார், அம்மாநில மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவால், கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினரும், வரும், 13ம் தேதி 'பந்த்' நடத்த அழைப்பு விடுத்து உள்ளனர். ஆனால், போராட்டத்தை வாபஸ் பெற, முதல்வர் சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். மைசூரு விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:  கபினி அணையில் தேக்கப்படும் நீர் விபரம் குறித்து, அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் தகவல் அளித்து வருகின்றனர்.

அணைக்கு வரும் நீரின் அளவு, 40,000 கன அடியை எட்டியுள்ளது. இயற்கை யாருக்கும் சொந்தமான சொத்து அல்ல . நாம் இயற்கையின் விருப்பப்படியே வாழ்கிறோம். நாம் தண்ணீர் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்தாலும், தேக்கி வைக்க முடியாது. ஒரு ஜனநாயக அமைப்பில், அனைவரின் போராட்டமும் மதிக்கப்படும். ஆனால், இப் போது போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.

மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கக்கூடாது. இம் மாநிலத்தில் தான், அனைத்து மக்களும் வாழ்கின்றனர். நாங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டோம். தமிழகம் உட்பட நாம் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள். பங்காரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, தேவகவுடா ஆகியோரின் காலத்தில் கூட, சிரமங்கள் எழுந்த போது, அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்பட்டன. நாங்கள் செய்தது சரி என்றும், அவர்கள் செய்தது தவறு என்றும் கூறவில்லை.

தமிழகத்துக்கு, 177.25 டி.எம்.சி., தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை மதிக்க வேண்டும். நம் விவசாயிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில், எனது அரசு உறுதியாக உள்ளது. காவிரி விவகாரத்தில், பா.ஜ., அரசியல் செய்கிறது. தமிழக எம்.பி.,க்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தங்கள் அரசியல் லாபத்துக்காக போராடுகின்றனர்.

முன்னதாக, உங்களுக்கு விருப்பமான இடத்தில் அணை கட்டலாம் என்று அவர்கள் கூறியிருந்தனர். அதற்கான ஆவணங்களும் உள்ளன. மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. தமிழக முதல்வர், வரும், 3ம் தேதி கர்நாடகாவுக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால், இங்கு நிலைமை சரியில்லை.

ஏனெனில், எந்தவொரு பேச்சு நடப்பதாக இருந்தாலும் அமைதியான, இணக்கமான சூழ்நிலையில் நடக்க வேண்டும். எங்கள் நிலைமையும், அவர்களின் நிலைமையும் எங்களுக்கு தெரியும். பேச்சு மூலம் பிரச்னையை தீர்க்க முடிந்தால் தீர்க்கட்டும்; அவர்கள் தங்கள் உரிமைகளை பெறட்டும்; நாங்கள் ஒருபோதும் தடுக்க மாட்டோம்.

நீதிமன்றம் வழங்கிய எங்கள் உரிமையை நாங்கள் பெறுவோம். இதற்கு, அனைவரும் ஒத்துழைப்பர் என்று நம்புகிறோம். அனைத்து நிலைமைகளும் தெரிந்த பின், விஜயின் வருகை தேதி நிர்ணயிக்கப்படும்.நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில், முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களின் கருத்துக்கள் கேட்கப்படும். தற்போது தமிழகம், 9,000 கன அடி தண்ணீர் கோரி உள்ளது. ஆனால், 3,500 கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

25,000 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகாவின் கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் வினாடிக்கு, 10,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளியில் கபிலா ஆறு குறுக்கே, 65 அடி உயரம், 19.5 டி.எம்.சி., நீர் கொள்ளளவில் கபினி அணை கட்டப்பட்டுள்ளது. அதற்கு கேரள மாநிலம், வயநாடு நீர்ப்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த தென் மேற்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை வினாடிக்கு, 11,747 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து, மதியம், 2:00 மணிக்கு, 15,500 கனஅடியாக அதிகரித்தது.

அதற்கேற்ப அணையின் நீர் இருப்பு, 18 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப, 1.5 டி.எம்.சி., மட்டுமே தேவைப்படும் நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மதியம், 2:00 மணிக்கு, முதல் கட்டமாக வினாடிக்கு, 10,000 கனஅடி உபரிநீர், கபிலா ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், கபிலா ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் இந்த நீர், கபினி அணையில் இருந்து, 75 கி.மீ.,ல் உள்ள டி.நரசிபுரா காவிரி ஆற்றில் கலந்து, 175 கி.மீ.,ல் உள்ள மேட்டூர் அணைக்கு இன்று மாலை அல்லது இரவில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கனமழையால் கபினி அணைக்கு வரும் நீர் வரத்து நேற்று இரவு வினாடிக்கு 20,000 கன அடியாக உயர்ந்தது.

இதனால், அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீர்

வெளியேற்றப்பட்டது.

கபினி உபரி நீர் திறப்பால், தமிழகம் - கர்நாடகா எல்லை காவிரி ஆற்றில், தண்ணீர்\r\nபெருக்கெடுத்து செல்லும். இதனால், கரையோரத்தில் நாளை ஆடிப்பெருக்கு கொண்டாடும்

மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.