இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
2 ஆவணி 2026 ஞாயிறு 15:57 | பார்வைகள் : 1140
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவந்த, வெளிநாட்டுப் பயணியொருவர் நேற்று சனிக்கிழமை (01) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குறித்த சிகரெட் தொகுதியை சீனாவில் கொள்முதல் செய்துள்ளதுடன், சீனாவிலிருந்து இந்தியா - சென்னைக்கு வந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான 6E-1175 என்ற விமானம் மூலம் நேற்று 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது சந்தேகநபர் கொண்டு வந்த 02 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய சீனாவில் தயாரிக்கப்பட்ட 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய சீன நாட்டவரைக் கைதுசெய்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire